அரசாங்கத்துக்கு எதிராக நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நேற்றுக் குழப்ப நிலைமை காணப்பட்டது. அதனால் பேரணியில் இருந்து பலர் இடைநடுவே விலகிச் சென்றனர் என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருதானையில் ஆரம்பித்து டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேரணியை புறக்கோட்டை வீதியில் பொலிஸார் வழிமறித்தனர்.
அந்தப் பொலிஸ் தடுப்பரணை மீறிச் செல்வதா? அல்லது பேரணியை நிறுத்துவதா என்பது தொடர்பில் அங்கு குழப்ப நிலைமை காணப்பட்டது.
அதையடுத்து பேரணியில் கலந்து கொண்ட பலர் அங்கிருந்து சலிப்புடன் விலகிச் சென்றதை அவதானிக்க முடிந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் பெரும் எண்ணிக்கையானோருடன் ஆரம்பமான பின்னர் இந்தக் குழப்பங்களால் பின்னர் நலிவடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post