Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த இ.தொ.கா!!- கடும் நெருக்கடியில் கோத்தா!!

April 26, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த இ.தொ.கா!!- கடும் நெருக்கடியில் கோத்தா!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. 

கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று அறிவித்துள்ளார்.  

2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,  2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் அரசுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிட்டது.  

நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஜீவன் தொண்டமானும், மருதபாண்டி ராமேஸ்வரனும் தெரிவாகினர். இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் உறுப்பினர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் விருப்பு வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவான தமிழ் வேட்பாளராக ஜீவன் தொண்டமான் திகழ்கின்றார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்கு எதிரான ஆதரவை ஏப்ரல்  5 ஆம் திகதி இ.தொ.கா. மீளப்பெற்றுக்கொண்டது. நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்பட்டது.   

எனவே, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அக்கட்சி ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘நடுநிலை’ என்ற அறிவிப்பு வெளியானதால், கடும் எதிர்ப்புகள் வலுத்தன.  இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்கள் பக்கம் நின்று, இந்த முடிவை எடுத்ததாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Previous Post

வர்த்தகரை கொலை செய்ய திட்டமிட்ட குழு!!- சுற்றிவளைப்பில் கைது!!

Next Post

இரவிரவாக கூட்டம் நடத்திய ராஜபக்ச குடும்பம்! – எதிர்ப்பைச் சமாளிக்க தீவிர முயற்சி!!

Next Post
இரவிரவாக கூட்டம் நடத்திய ராஜபக்ச குடும்பம்! – எதிர்ப்பைச் சமாளிக்க தீவிர முயற்சி!!

இரவிரவாக கூட்டம் நடத்திய ராஜபக்ச குடும்பம்! - எதிர்ப்பைச் சமாளிக்க தீவிர முயற்சி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.