தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகாது இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
நாடு நெருக்கடியான நிலையில் உள்ள நேரத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது ஏற்புடையதல்ல என்றும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்தக் கட்சி கருதுகின்றது என்று அறியமுடிகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிலுள்ள 14 பேரில், பெரும்பான்மையானவர்கள் கருத்தையே கொண்டுள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், ஓரிரு உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post