முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக இருந்தவாறு ஆசிரியர்
-அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் அபயராம விகாரையில் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டுள்ளமை அரசியல் சூழ்ச்சியாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்
என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த
தென்னகோன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவது
குறித்து அரசாங்கமும், நாட்டு மக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும்
என்றார்.
ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்
வகையிலான பேச்சுவார்த்தை அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே
ஆனந்த தேரர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கத்தினரும் எதிர்க்கட்சி தலைவர் சஜித்
பிரேமதாஸ, சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,சுதந்திர
கட்சியின்பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்
அத்துரலியே ரத்ன தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்
மத்தும பண்டார,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முக்கிய பல
தரப்பினர் கலந்துக் கொண்டனர்.
Discussion about this post