பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு அரசியல் கைதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நான் ஏன் ரணில் விக்கிரமசிங்கவை இவ்வாறு தாக்குகின்றேன் என தமிழ் பேசும் மக்கள் இன்று பார்த்து கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்த சாணக்கியன், 2019 வரை இருந்த ரணில் விக்கிரமசிங்க வேறு தற்போது அவர் ராஜபக்ஷ குடும்பத்தை காப்பற்றுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவராக காணப்படுகின்றார் அவரால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்று தெரிவித்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பிரதமர் பதவியில் உள்ளார் என்றும் சாணக்கியன் தெரிவித்தார்.
Discussion about this post