நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தம்மை தாக்கியதாக நபரொருவர் காவல் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளார்.
பண்டாரகம காவல் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த நபர் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைப்பாளர் விஸ்வநாத் டி அல்விஸ் என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவிடம் கேட்டபோது, அவ்வாறான தாக்குதல்களில் தாம் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை தாக்க முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதான மெய்ப்பாதுகாவலரும் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிரிவு சிரேஷ்டகாவல்துறை அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி காவல் அத்தியட்சகர் உபாலி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பண்டாரகம காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் ஆர்.சி.ராஜபக்ச, சிறு முறைப்பாடு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உப காவல் பரிசோதகர் சி.சர்மிந்த ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post