முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் இந்த தீர்மானத்தை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி தொடர்பில் கலந்துரையாடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், இந்தத் தீர்மானத்துக்கு பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post