அரசாங்க ஊழியர்களுக்கு தபால் மூல வாக்களிப்பு நெருங்கிய போது சம்பள அதிகரிப்பை அறிவித்தமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டானது தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரமவால் (Arjuna Parakrama) முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் (colombo) நேற்று (18.9.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எங்களிடம் 125 முறைப்பாடுகள் உள்ளன, ஆனால் 30 முறைப்பாடுகள் மட்டுமே தேர்தலகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரச அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இந்தத் தேர்தலின் தன்மையைக் கூட மாற்ற முடியும். வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக, 5 அரச ஊழியர்களின் பணி இடைநிறுத்தப்பட்டனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்காமல், தபால் வாக்களிப்பு திகதி நெருங்கியபோது கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் தேர்தல் சட்டங்களும் மீறப்படுகின்றன.
பட்ஜெட்டில் வாகன இறக்குமதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post