அரசாங்க ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதச் சம்பளம் தொடர்பாக அரசாங்கம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்துக்குரிய சம்பளத்தை வழங்குவதில் எந்தவித்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை, பொருள்களின் விலையேற்றம் என்பவற்றை கண்டித்தும், அரசாங்கத்துக்கு எதிராக இலங்கையில் பல பகுதிகளில் மக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இல்லங்கள், அமைச்சர்களின் இல்லங்கள் மக்களால் முற்றுகையிடப்பட்டு வருகின்றன. இந்தநிலைமையில் அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேநேரம், மாதாந்தம் அரசாங்கம் செலவினங்களுக்காக நாணயத்தாள்களை அச்சிட்டு வருகின்றது என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசாங்கம் இவ்வாறு மாதாந்தம் பில்லியன் கணக்கான நாணயங்களை அச்சிடுவதால் நாட்டில் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post