கனடாவில் அரசின் புதிய வரி அறவீடு தொடர்பில் மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி காபன் வரி அறவீடு செய்வது தொடர்பிலேயே மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். நானோஸ் ஆய்வு நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
பொருத்தமற்ற நேரத்தில் காபன் வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு வரி அறவீடு செய்வதனால் காலநிலையில் தாக்கம் ஏற்படாது என பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post