எவ்வித சாக்குப்போக்கையும் சொல்லாமல் உடனானடியாக தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலையே நடத்த இந்த அரசாங்கம் பின்னடிக்குமானால், மாகாணசபை, பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் நிலைமை என்னாகும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்களின் வாக்குரிமையை தட்டி பறிக்க முடியாது என்பதனால் விரைந்து உள்ளூராட்சித் தேர்தலை அரசங்கம் நடத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் ஆணைக்கு வழிவிடுவது அரசாங்கத்தின் கடமை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post