ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் 20 ஆவது நாளான இன்றும் ஆயிரக் கணக்கான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளிருந்தும் வரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணமுள்ளனர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை வெளியேறுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமும் தொடர்கின்றது.
மைனா கோ கம என இந்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் அராசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post