அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், அரசாங்கத்திலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறும்.
இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடியது.
இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராயப்பட்டது.
மத்திய குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,
21 ஆவது திருத்தச்சட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும். இழுத்தடிப்பு இடம்பெறக்கூடாது. அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால், அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறும் என்றார்.
Discussion about this post