கூட்டமைப்பினர் ஒருபோதும் தமது கொள்கைகளை கைவிட்டு அரசாங்கத்துடன்
இணைந்து செயற்படமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான
விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதியின் கொள்கை உரையில் நாட்டின் பிரச்சினைகள் சம்மந்தமாக எந்தவொரு
கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்
சாட்டினார்.
வடக்கு – கிழக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை செய்வதற்காக ஜனாதிபதி
தெரிவித்தாலும், நீண்ட காலமாக அரசியல் ரீதியான சம உரிமையே தமிழ் மக்கள்
கோருவதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
மேலும் அரசியல் உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே அன்றி
அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற, மக்கள் கூட்டமைப்பிற்கு ஆணையை
கொடுக்கவில்லை எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்
Discussion about this post