அரசாங்கத்துக்கு எதிரான பெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்று இன்று மாலை கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சி உட்பட 150 பொது அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
பேரணியைக் கட்டுப்படுத்த பெரும் எண்ணிக்கையான ஆயுதப் படையினர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் பதற்ற நிலைமை காணப்படுகின்றது.
ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அடைவதைத் தடுக்கும் வகையில் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன, தண்ணீர் தாரைப் பிரயோகத்துக்கும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post