மக்கள் கருத்துக்குப் பணிந்து வீடு செல்லவும் என்ற தொனிப்பொருளில் ஆயிரக்கணக்கான அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் என தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
7 நாள்களுக்குள் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என அறிவிப்பதே இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையின் நோக்கமாகும் எனவும், அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முயற்சித்தால் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, துறைமுகங்கள், மின்சாரம், எண்ணெய், பெருந்தோட்டங்கள், தபால் சேவைகள், சமுர்த்தி மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறையினரும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post