அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் மூவரையும், 90 நாள்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என்று அறிய முடிகின்றது.
கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரிடம், போராட்டக்களத்தில் ஏப்ரல் 9 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யத் தீர்மானிக்கப்பட்டுளள்து என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Discussion about this post