ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்துகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி செயலகததைச் சூழல அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தபோதும், பாதுகாப்பை மீறிச் சென்று செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழையவும் முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகக் கோசங்களை எழுப்பினர்.
நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளே அதற்குக் காரணம் என்றும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Discussion about this post