நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். அதையடுத்து நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணி முதல் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.
விமல் வீரவன்ச கட்சியைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைக்கு அரசாங்கத்தில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. எதிர்த்தரப்பில் தற்போது 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
Discussion about this post