அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இராஜாங்க அமைச்சு பதவியை நேற்று துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post