அரச சேவையை அரசாங்கம் ஒருபோதும் அற்பமானதாகக் கருதுவதில்லை என்று கூறிய பிரதமர் ஹரினி அமரசூரிய(harini amarasuriya), அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ஊழியர்களிடையே உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டை அபிவிருத்தி செய்ய மக்களின் நம்பிக்கை தேவை
பொதுச் சேவைகள், அரச பொறிமுறைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது
“அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான பொது நம்பிக்கையே தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது, அது நம் நாட்டில் இல்லை.
பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளதுஅரசியல்வாதிகள் மற்றும் பொது சேவைகள் மீது மக்களுக்கு எதிர்மறையான அணுகுமுறை உள்ளது. அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் பயனற்றவை என்ற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுச் சேவை அற்பமானது என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.வலுவான, திறமையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொது சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Discussion about this post