முன்னாள் போராளியான செ.அரவிந்தன் அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம்
என தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை மாவீரர் தினத்தில் வாழை மரத்தில் விளக்கேற்றியது தொடர்பில்
மூன்று நாட்களிற்கு முன் மூன்றரை மணிநேரம் பயங்கரவாத பிரிவினரால் விசாரிக்கபட்டேன் என குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செ.அரவிந்தன் கூறியுள்ளார்.
வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று கேட்கபட்ட கேள்விக்கு, அது எமது பாரம்பரியம் என் கூறினேன்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சட்டங்களிற்கு அமைவாகவே நாம் யுத்தத்தில்
இறந்தவர்களை நினைவு கூருகின்றோம். மாறாக விடுதலை புலிகளின் தடை
செய்யப்பட்ட கொடி போன்ற பொருட்களை எதனையும் நாங்கள் எங்கும்
காட்சிப்படுத்தி நினைவு கூரவில்லை .
நாட்டின் சட்டங்களை எதிர்த்து நாம் எதனையும் செய்யவில்லை . எமது
உறவுகளை நாங்கள் நினைவு கூருகின்றோம் இதற்காக நீதிமன்றம் வரையும்
சென்றிருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post