ஜனாதிபதித் தேர்தலின் போது அரச அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (Human Rights Commission of Sri Lanka) தீர்மானித்துள்ளது.தேர்தல் காலத்தில், அரச அதிகாரிகளால் பொது மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக, ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இவ்வாறான செயற்பாடுகளை கருத்திற்கொண்டே, வழிகாட்டல்களை வெளியிட முடிவு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடாத தகவல்எனினும், அது எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) அனுசரணையுடன் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள், சீருடைகளுடன் பங்குபற்றியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விளக்கம் கோரியுள்ளது
Discussion about this post