இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைகள் காணப்படுகின்றன என ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் 22 மில்லியன் மக்கள் தற்போது இலங்கையில் என்றும் காணப்படாத மிகவும் துயரமான- மிகவும் மோசமான பொருளாதார சமூக நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாடாளுமன்ற பொறிமுறை ஊடாக நாங்கள் இந்த தீவிரமான சீர்திருத்தங்களை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என்று தெரிவித்த அவர்,
நிதிக்குழு அல்லது விசேட குழு மூலம் இதனை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம் இதற்கான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஹர்ச டிசில்வா மத்திய வங்கி ஆளுநர் தான் ஒருபோதும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடப்போவதில்லை- அதன் ஆலோசனையும் தேவையில்லை என தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பின்பற்றிய பொருளாதார கொள்கைகள் முற்றாக தோல்வியடைந்துவிட்டன என சர்வதேச நாணயநிதியம் தற்போது தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் திட்டமும் தோல்வியை என்பதை நிருபித்துள்ளது என குறிப்பிட்டுள்ள ஹர்சா டி சில்வா சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை ஏற்கவேண்டுமா இல்லையா என்பது அரசியல் தீர்மானம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post