நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா அம்மா ஷாலினியை மிஞ்சும் அழகில் காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் அஜித் ஷாலினி இருவரும் அமர்களம் படத்தில் நடித்ததன் மூலம் பின்பு காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களை நடித்து பின்பு மலையாளத்தில் வெளியான அனியாத பிறவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு, அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன.
2009 ம் ஆண்டு அஜித்தைக் காதலித்து வந்த இவர், அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களை நடித்த முடித்த பின்பு திருமணம் செய்து கொண்டார்.
பின்பு இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற குழந்தைகள் உள்ளனர். நடிகர் அஜித் தற்போது வரை உச்ச நடிகராக வலம்வருகின்றார்.
இந்நிலையில், அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி ஓவிய கண்காட்சிக்கு ஷாலினி தனது மகளுடன் வந்துள்ளார். நடிகை ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஓய் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இவர் தனது ஓவியத்தில் பெண்களை மையமாகவே வைத்து காட்சிபடுத்தி வருகின்றார். இந்த ஓவியக் கண்காட்சியை சிறப்பிக்க ஷாலினி தனது மகளுடன் வந்துள்ளார்.
ஷாலினி மற்றும் ஷாமிலிக்கே டஃப் கொடுக்கும் விதமாக மெழுகு சிலையாக அஜித்தின் மகள் நிற்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அதுமட்டுமின்றி அடுத்த கதாநாயகியாக வருவாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வியும் எழுப்பி வருகின்றார்.
Discussion about this post