அமைதியான அதிகார மாற்றத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசமைப்புக்கு உட்பட்டு சுமூகமான மற்றும் அமைதியான அதிகார மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மக்கள் உண்மையான மாற்றத்துக்காக மேற்கொண்ட தியாகங்கள் கணக்கிடமுடியாதவை.
இலங்கை மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கு அமைதியான மாற்றத்தையும், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, அரசமைப்புக்கான தொடரும் மதிப்பையும் உறுதிப்படுத்த வேண்டியதும் முக்கியமானது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் அறிக்கைகள் சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பீட்டுக்கு உட்படுத்துவது போன்று காணப்படுவது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்றுள்ளது.
Discussion about this post