அமைச்சு பதவிகளை பங்கிட்டுக்கொள்வதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்தும், பல்வேறு தரப்புகள் ஊடாகவும் தமக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர் என அறியமுடிகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி, பிரதமர் தவிர, ஏனைய 23 அமைச்சுக்களுக்கு ஏற்கனவே 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சுமார் 10 அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன், ஏற்கனவே அந்த கட்சியை சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இந்நிலையிலேயே போட்டி நிலவுகின்றது.
Discussion about this post