நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது.
நேற்றுக் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிறைவேற்றாத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிச் சுயாதீனமாகச் செயற்படுவது என்றும் சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
Discussion about this post