நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை சபைக்கு வரச் சொல்லுங்கள், இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்கு கட்டளை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு எதிரணியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர்.
நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசெம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார்.
அதன்பின்னர் நாட்டின் நிதி நிலவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவில்லை.
அவர் நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்த வேண்டும் என்று நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார்.
Discussion about this post