அரசாங்கத்தை நிர்வகிப்பதற்காக சிறிய அமைச்சரவையொன்று நியமிக்கப்படவுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரசமைப்பை பின்பற்றியே செயற்படுவேன் என்றும், அதை மீறி நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்றும் அவர் இந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாடு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்டநேரம் ஆராயப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திப்பில் கலந்துகொண்ட பல சிரேஸ்ட உறுப்பினர்கள் தங்களுக்கு அமைச்சு பொறுப்பு வேண்டாம் என தெரிவித்துள்ளதுடன் இளையவர்களை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றும் அறிய முடிகின்றது.
Discussion about this post