அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை கால் சதவீதம் உயர்த்தியது. கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.
கால் சதவீதம் உயர்வை அடுத்து வட்டி விகிதம் 5.25 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமானது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் உயர்வால் அமெரிக்காவில் வீடு, வாகன கடன்களின் செலவு அதிகரிக்கும். அதேசமயம் பணவீக்கத்தைச் சமாளிக்க இன்னும் அதிகளவில் வட்டி விகிதத்தை இந்த ஆண்டு (2023) வங்கி உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு என்பது, இந்திய ரிசர்வ் வங்கியிலும் எதிரொலிக்கும் என கூறப்படும் அதேவேளை இந்தியாவிலும் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பை செய்ய தூண்டலாம்.
அமெரிக்க வங்கியின் இந்த அதிரடி முடிவால் இந்திய பங்கு சந்தை தொடங்கி, கடன் பத்திர சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் வரையில் எதிரொலிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post