ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு, தடை விதிக்கும் யோசனை உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரட்டை குடியுரிமை உடைய பஸில் முன்கூட்டியே தனது எம்.பி. பதவியை துறந்தார்.
எனினும், இலங்கையில் தீவிர அரசியலில் ஈடுபட அவர் விரும்புவதாகவும், 2024 ஜனாதிபதி தேர்தல் அவரின் இலக்காக இருப்பதாலும் அமெரிக்க குடியுரிமையை துறக்ககூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
Discussion about this post