நாட்டின் அவசர மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சால், சுகாதாரத்துறைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
உபகரணங்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைத்து சுகாதார அமைச்சிடம் கையளித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் இவற்றில் அடங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post