அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் அதிபர் தேர்தல் தொடர்பில் தொழில்முறை பாடிபில்டரும், பிரபல ஹாலிவுட் முன்னணி கதாநாயகனும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில முன்னாள் கவர்னருமான 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது,
அமெரிக்கர்களை குறித்து கவலைப்படுகிறேன். 2024 தேர்தலில் மீண்டும் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் போட்டி என்பது ஏமாற்றமட செய்கிறது.
இருவருக்கும் அதிக வயதாகி விட்டது என்பதனால் மட்டுமல்ல; அவர்கள் சிறப்பானவர்கள் என்று நான் கருதவில்லை.
வெள்ளை மாளிகையில் புதிய ரத்தம் வேண்டும். புதிய சிந்தனைகளை உடைய தலைவர்கள் வேண்டும். இரு கட்சிகளிலும் அப்படி ஒரு புதிய முகம் இல்லாதது கவலை அளிக்கிறது.
பைடன் பேட்டி அளித்தால் அனைத்து பத்திரிகையாளர்களும் அதை படம் பிடிக்கின்றனர். டிரம்ப் எது கூறினாலும் அதையும் படம் பிடிக்கின்றனர். தலைப்பு செய்திகள் முழு பைடன் அல்லது டிரம்ப் குறித்தே உள்ளது.
இந்த நிலையில் வேறு ஒரு புதிய முகம் எவ்வாறு உருவாக முடியும்?
நாட்டின் முன் உள்ள பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள மிகுந்த திறன் படைத்த ஒருவர் வேண்டும். ஜான் கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் காலகட்ட பிரசாரம் போன்று தற்போது நடைபெறுவதில்லை.
இரு கட்சிகளிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்கும் புதிய முகம் வேண்டும் என அர்னால்ட் தெரிவித்துள்ளார்.
Discussion about this post