கொவிட் தொற்றுக்குள்ளாகுபவர்கள் மற்றும் தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகி
உயிரிழப்பவர்கள் வீதத்தில் இலங்கையானது அமெரிக்கா, பிரித்தானியா,
சிங்கப்பூர், பூட்டான், நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன்
ஒப்பிடும் போது மிகவும் உயர்மட்டத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. அரச
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரவு பகுப்பாய்வொன்றின் மூலம் இந்த
அதிர்ச்சி தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படுகின்ற இந்த பாரதூரமான நிலைமையை வெற்றிகரமாகக்
கட்டுப்படுத்துவதற்கு தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கொவிட்
பரிசோதனைகளின் அளவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதுமானதாக அமையாது.
இந்த தரவு பகுப்பாய்வின் ஊடாக கொவிட் பரவைலக் கட்டுப்படுத்தல்
தொடர்பிலும் தடுப்பூசி வழங்கல் தொடர்பிலும் தொற்று நோயியல் பிரிவு
மற்றும் அரசாங்கம் என்பன ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் கீழ்
மட்டத்தில் இருப்பது வெளிப்படுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post