அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நியூயோர்க் நகரில் ஹோட்டல்கள் மற்றும் உணவு விநியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவிக்கையில்,
“பிளாஸ்டிக் பாத்திரங்கள், கரண்டி மற்றும் கத்தி போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் 95 வீதமான குப்பைகள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது“ என மேயர் நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post