அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக அலாஸ்காபாக்ஸ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அலாஸ்காபாக்ஸ் பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கும் ஒரு வகை வைரஸ் ஆகும்.
அவை ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் வகையைச் சேர்ந்தவை என்பதால், தோல் புண்கள் அல்லது தடிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த வகை வைரஸ்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சில மிகவும் ஆபத்தானவை.
2015ஆம் ஆண்டில், அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே வசிக்கும் ஒரு பெண்ணிடம் அலாஸ்காபாக்ஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
Discussion about this post