அமெரிக்காவில் நேபாள கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சூட்டு கொலை செய்த சந்தேக நபர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 21 வயதான முனா பாண்டே. நேபாள நாட்டை சேர்ந்த இவர் கல்லூரியில் படித்து வந்து இருக்கிறார்.
இந்த நிலையில், குறித்த மாணவி துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு குண்டு காயங்களால் குடியிருப்பில் கிடந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை யடுத்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தபோது, மாணவி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சி.சி.ரி வி. காட்சி பதிவுகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, சம்பவ பகுதியிலிருந்து பாபி சின்ஹா ஷா (வயது 52) என்பவர் தப்பி சென்றது தெரிய வந்தது.
அவரை போக்குவரத்து நிறுத்தத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான காரணம், உள்நோக்கம் போன்றவை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. அதுபற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post