அமெரிக்காவின் முக்கிய இடங்களை தமது செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளதாக வடகொரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இது உளவு பார்க்கக் கூடிய செயற்கை கோள் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட வடகொரி யாவின் முதல் உளவு செயற்கைகோளும் இது தான்.
இந்த செயற்கை கோள் உளவு பார்த்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக வடகொ ரியா கூறியுள்ளது. இந்த உளவு செயற்கை கோளானது அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற்படை நிலையங்களின் புகைப் படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
மேலும் ரோம்நகரம், குவாமில் உள்ள ஆண்டர் சன் விமானப்படை தளம், பேர்ல் துறைமுகம், அமெ ரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றை யும் புகைப்படம் எடுத்துள்ளது.
இந்த புகைப்படங்களை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் பார்த்துள்ளதாக அந்நாட்டிலிருந்து இருந்து வெளியாகும் அதிகாரப் பூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், “உளவு செயற்கைகோளை நன்றாக சரிப்படுத்தும் நடைமுறை இன்னும் 2 நாட்களில் முடிவடையும். டிசம்பர் 1-ம் திகதி முதல் இந்த செயற்கைகோள் உளவுப் பணியை தொடங்கும்” என்று தெரிவித்து உள்ளது.
ஆனால் வடகொரிய செயற்கைகோள் எடுத்து உள்ள புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை
Discussion about this post