உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் ஐபோன்களை குறைந்த விலையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த ஐபோன்களை இந்திய ரூபாய் 50,000ற்கும் குறைவான விலையில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் iPhone SE 4 தொலைப்பேசியை எப்போது அப்பிள் நிறுவனம் வெளியிடும் என்றும் வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளனர் எனலாம்.
எனவே iPhone SE 4தொலைப்பேசி அடுத்த வருட ஆரம்பத்தில் அல்லது மார்ச் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
iPhone SE 3ல் உள்ள அம்சங்கள் மக்களிடத்தில் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்ப்பை பெறவில்லை.
இதனால், தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள iPhone SE 4ல் புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகள் மாறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வெளியாகியுள்ள தகவல்களின் படி iPhone SE 4 வடிவமைப்பு iPhone 14 ஐப் போன்று இருக்கும் என கூறப்படுகின்றது.
iPhone SE 4 ல் மேலே Notch இருப்பதோடு அதே இடத்தில கெமரா, Sensor மற்றும் ஸ்பீக்கர் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், சிறந்த வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்க இதில் OLED Display இருப்பதோடு இந்த iPhone SE 4 பேட்டரி iPhone 14 பேட்டரியைப் போன்று இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post