நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மக்களுக்கு அனுமதியை வழங்கி அவசியமான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.
எந்தவொரு வீட்டினதும் தொழிற்சாலைகளினதும் கூரைகள் மீது இலகுவாக பொருத்தக் கூடிய சூரிய சக்தி தகடுகள் உள்ளன.
அதனூடாகப் பகல் வேளையில் மின்சாரத்தை பெறமுடியுமாயின் தற்போது மின்னுற்பத்திகாக பயன்படுத்தப்படும் நீர் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி இரவு வேளையில் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும். 24 மணிநேரமும் துண்டிப்பின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றார்.
Discussion about this post