அனைத்து சாதாரண கடன் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது என்று திறைசேரிச் செயலாளர் அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான பொருளாதார சரி செய்தல் திட்டத்துடன் ஒத்துபோகுமு் கடப்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மறுசீரமைப்பு நிலுவையில் உள்ள இடைக்காலத்துக்கு அனைத்து சாதாரண கடன் சேவைகளும் தற்காலிகமாக இடைறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான இணையவழி பேச்சு வெற்றியளித்துள்ளது என்று நிதியமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டப் பேச்சு அமெரிக்காவில் வொஷிங்டனில் நடைபெறும் என்றும், அதற்காக நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post