நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தி முன்வந்தால் சிறிலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(slpp) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக கூறிய போதிலும், எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான சிறந்த தருணம் இதுவாகும்.
எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டிய தேவை இருந்தால் தாமதிக்க வேண்டாம் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்
படு தோல்விநடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கிய நாமல் ராஜபக்ச 342781 வாக்குகளை பெற்று படு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்து
Discussion about this post