எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் வருகின்ற இந்திய மீன்பிடிப்
படகுகள் கைப்பற்றப்பட்டு, சட்ட ரீதியாக அவை அரசுடமையாக்கப்படும் என,
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாகூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுகத்துக்கான விஜயத்தை, நேற்று (21)
மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவை
வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர், பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும்
துறைமுக நிர்வாகத்தினருடனான பெச்சுவார்த்தையின் போதே, இவ்வாறு
கூற்யுள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர், மயிலிட்டித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட
அபிவிருத்திப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும்
கூறியுள்ளார்.
இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கையின் கடல் வளத்தையும்
பாதிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில் முறைகளில்
ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை
வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்ற கடற்படையினருக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி
தெரிவிப்பதாகவும் கூறினார்.
Discussion about this post