திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகின்றார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்கட்சி பலவீனமாக உள்ளதால், தற்போதைய அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கும், அதனூடாக நிலையான ஆட்சியை அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் உத்தேசித்துள்ளார் என்று அறிய முடிகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் கடந்த சில நாள்களாக பேச்சு மேற்கொண்டு வருகின்றார்.
உடனடி ஜனாதிபதி தேர்தல் ஒன்று வருமாயின் ரணிலை வேட்பாளராக நிறுத்தி அவரை வெற்றிபெறச் செய்ய ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூரத் தீர்மானித்துள்ளது என்றும் அறிய முடிகிறது.
Discussion about this post