அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய பிணைத் தொகையை 26 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றிலிருந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதுவரை 50,000 ரூபாவை வைப்புத் தொகையாக செலுத்தி வந்தனர், அதனை தற்போது 26 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சுயேட்சை வேட்பாளர் வைப்புச் செய்ய வேண்டிய தொகை தற்போது ரூ.75,000 ஆக உள்ளது, அதை ரூ.31 லட்சமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வைப்புச் செய்யப்பட்ட தொகையில் ஒரு இலட்சம் ரூபாயை திரும்ப செலுத்த முடியாத வைப்புத்தொகையாகவும், மீதியை திரும்பப்பெறக்கூடிய வைப்பாகவும் வைப்புச் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் வேட்பாளர்கள் வைப்பிலிட வேண்டிய வைப்புத் தொகையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
Discussion about this post