நாட்டில் அதிக வெப்பமான வானிலை வவுனியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 12.6 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவியுள்ளது.
இதேவேளை, அதிகளவான மழைவீழ்ச்சி மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் 63.7 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் நிலவும் வறட்சியினால் 10,000 சிறிய ஏரிகள் வறண்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல மாவட்டங்களில் நெற்செய்கை மற்றும் வயல் பயிர்களுக்கு நீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிய குளங்கள் வறண்டு கிடப்பதால் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், அனுராதபுரம், அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பயிர்களை பாதுகாக்க ஏரிகளில் கிணறு தோண்ட ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக வெப்பநிலை காரணமாக ஏரிகள் வேகமாக வறண்டு வருவதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post