போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதான கட்டடத் தொழிலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். உயிரிந்தவரின் உடல் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மயிலங்காட்டைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடம் இருந்து பிறி கப் போதை மாத்திரைகளைக் கொள்வனவு இளைஞரும், இன்னொருவரும் செய்துள்ளனர்.
நீரில் நனைந்திருந்த மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்துள்ளன. அவற்றை ஒன்றாக உட்கொண்டதாலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.
போதை மாத்திரையை உட்கொண்ட இன்னொருவரிடம் விசாரணையின்போது வாங்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
Discussion about this post