நாடு முழுமையாக திறக்கப்பட்டதும், வட மத்திய மாகாண தனியார் பஸ் போக்குவரத்தின் போது, பஸ்களில் அதிக ஒலியுடன் வானொலி மற்றும் இசை நிகழ்ச்சி பாடல்களை ஒலிக்கச்செய்து பிரயாணிகளை கடும் அசௌகரியத்துக்கு உட்படுத்தும் நடவடிக்கை முற்றாக நிறுத்தப்படும் என வட மத்திய மாகாண மக்கள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.இரைச்சலுடன் கூடிய அதிக ஒலியுடன் ஒலிக்கப்படும் இசையூடாக அனேகமானோர் தலையிடி போன்ற உபாதைகளுக்கு உள்ளாகுவதாகவும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்ததை தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post