சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. இவை பாலூட்டிகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியையை இவ்வாறு சிவப்பு இறைச்சி என்று கூறுகின்றோம்.
அதாவது ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சி சிவப்பு இறைச்சியில் அடங்கும். இவைகளின் இறைச்சி சிவப்பு நிறத்தில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்துள்ளது.
ஆனால் புரதம் அதிகம் இருக்கும் கோழி மற்றும் மீன் இறைச்சிகளை சாப்பிடுவது ஆரோக்கியமாக கருதப்படுகின்றது. மேலும் இவற்றில் கேடு விளைவிற்கும் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் இதனை நாம் சாப்பிடலாம். ஆனால் இவற்றினை பெரித்தோ, வறுத்தோ சாப்பிடக்கூடாது.
இதே போன்று மீன் இறைச்சியிலும் அதிகமான புரதங்களும், ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இவை ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகின்றது. அதுமட்டுமில்லாமல் வைட்டமின் டி, வைட்டமில் பி 6 மற்றும் பி12 போன்றவையும் இதில் இருக்கின்றது.
2018ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சிவப்பு இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் 48 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், சிவப்பு இறைச்சியினை குறைவாக சாப்பிடவும்.
Discussion about this post